பினாங்கில் கான்கிரீட் இடிந்து விழுந்து இந்தோனேசியர் மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 30: நேற்று  மாலை பினாங்கு, புக்கிட் மெர்தாஜமில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில், கான்கிரீட் இடிபாடுகள் மீது விழுந்து நசுக்கப்பட்டதில் இந்தோனேசியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

மாலை சுமார் 4 மணியளவில் ஜாலான் குவார் பெராஹு இந்தாவில் இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு, பொதுமக்கள் கான்கிரீட் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து அவரை மீட்டெடுத்த பின்னர், 27 வயதான அந்தத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *