மலேசியத் தூதரகம் மீது இந்தோனேசியர்கள் முட்டை வீச்சு!
- Shan Siva
- 01 Feb, 2025
ஜாகர்த்தா, பிப். 1- இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் உள்ள மலேசியத் தூதரக கட்டடத்தின் மீது கிட்டத்தட்ட நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் முட்டைகளை வீசித் தாக்கினர். சிலாங்கூர் மாநிலத்தின் பந்திங், தஞ்சோங் ரூ கடற்கரை அருகே ஜனவரி 24ஆம் தேதியன்று ஐந்து இந்தோனேசியக் குடியேற்றத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து வியாழக்கிழமையன்று அவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஜாகர்த்தா நகரின்
மையப் பகுதியில் மலேசியத் தூதரகக் கட்டடம் உள்ளது. அத்தூதரகத்தின் நுழைவாயில்
உள்ள அரசு முத்திரை மீதும் முட்டைகள் வீசப்பட்டன. அந்த முத்திரை முழுவதும்
முட்டைக் கருவினால் அசுத்தப்பட்டது. தூதரகக் கட்டடத்தின் சுவர் பகுதிகளிலும்
உடைந்த முட்டைகள் ஒட்டிக் கிடப்பது காணப்பட்டது. இந்தோனேசியத் தொழிலாளியைச் சுட்டுக் கொன்ற
மலேசிய போலீஸ்காரர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தும்படியும்
ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



