கிள்ளான் ஆற்றில் பிணமாக மிதந்த இந்தோனேசிய பெண்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக் 5: சுபாங் ஜெயாவின் USJ 1 பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு அருகில், கிள்ளான் ஆற்றில் நேற்று மதியம் இந்தோனேசியப் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மதியம் 12.58 மணிக்கு பொதுமக்கள் ஒருவர் சடலம் கண்டெடுக்கப்பட்டதை தங்களுக்குத் தெரிவித்ததாக சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மமாட்  கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், இறந்தவரின் முகம் ஏற்கனவே சிதைந்திருந்ததும், அவரது கைகள் மற்றும் கால்களில் தோல் உரிந்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இறந்தவரின் இந்தோனேசிய அடையாள அட்டை அடங்கிய ஒரு தோள்பையையும் காவல்துறையினர் கண்டெடுத்ததாக வான் அஸ்லான் கூறினார். மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

தற்போதைக்கு இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *