இன, மத பிளவுகளின் அச்சுறுத்தலிலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் – அன்வார் இப்ராஹிம்
- Tamil Malar (Reporter)
- 09 Feb, 2026
புத்ராஜெயா, பிப். 9-
உலகளாவிய அளவில் இனமும் மதமும் அடிப்படையாகக் கொண்ட பிளவுகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், மலேசியா போன்ற நாடுகள் இதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் (AS) பாசிசம், இனவாதம் மற்றும் இஸ்லாமோபோபியா போன்ற சிந்தனைகள் மீண்டும் தலைதூக்குவது மலேசியாவிற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றார். இவ்வகை வெறுப்பு உணர்வுகள் கல்வியறிவு பெற்ற சமூகத்திலும் பரவி விடக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
“நாம் இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இப்போது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். பாசிசமும் இனவாதமும் வலுப்பெற்று வருகிறது. சிறுபான்மையினர் மீது வெறுப்பு, இஸ்லாமோபோபியா, மற்ற மதங்களுக்கும் எதிர்ப்பு அதிகரிக்கிறது,” என அவர் கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.
மேலும், அறிவு அல்லது தர்க்க ஆதாரம் இல்லாமல் இன, மத வெறுப்பு கருத்துகள் பரப்பப்படுவது மிகுந்த கவலைக்குரியது என்றும், இது சமூக ஒற்றுமையை உடைக்கும் ஆபத்தை உருவாக்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



