சபாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீயில் சிக்கிய நபர்! 80 விழுக்காடு பாதிக்கப்பட்ட நிலையில் மீட்பு
- Shan Siva
- 08 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 8: சபா, கோத்த கினபாலு, பெனாம்பாங்கில்
உள்ள தனது குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.
இன்று காலை 11 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து,
29 வயதான அந்த நபரின் உடலில் 80% க்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டன.
காலை சுமார் 11.15 மணியளவில் தங்களுக்கு ஒரு அவசர அழைப்பு
வந்ததாக பெனாம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜெனோ திங்கலன்
கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்து,
பாதிக்கப்பட்டவருக்கு முதற்கட்ட சிகிச்சை
அளித்ததாகவும், பின்னர் அவர் மேலதிக
சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் அவர் ஒரு
அறிக்கையில் தெரிவித்தார்.
காலை சுமார் 11.35
மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தங்களது மீட்புப்
பணிகளை முடித்துக் கொண்டனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

