நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 1,365 ஆக உயர்வு – 5,326 பேரை தேடும் பணி தீவிரம்
- Surendran Sumdraraj
- 09 Sep, 2026
காத்மாண்டு, செப். 9 –
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவான பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,365 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 5,326 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேபாள–திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பனிப்பாறை உடைந்ததைத் தொடர்ந்து போடேகோஷி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.
வெள்ளத்துடன் வந்த சேறு, சகதி மற்றும் இடிபாடுகள் வீடுகள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளைக் கடுமையாகச் சேதப்படுத்தின. திரிசூலி 3ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதையிலும் தொழிலாளர்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் சுமார் 589 பேர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



