இளம் தலைமுறையினர் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்
- Surendran Sumdraraj
- 23 Apr, 2026
இங்கிலாந்தில் இளம் தலைமுறையினரை புகைபிடிப்பு பழக்கத்திலிருந்து காக்கும் நோக்கில் புதிய வரலாற்றுச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த “Tobacco and Vapes Bill” என்ற சட்டத்தின் மூலம், 2009 ஜனவரி 1க்கு பிறகு பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் சட்டப்படி சிகரெட் வாங்க முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக, தற்போதைய 17 வயது மற்றும் அதற்கு குறைந்தவர்களுக்கு எதிர்காலத்திலும் சிகரெட் வாங்கும் உரிமை வழங்கப்படாது. மேலும், 2027ஆம் ஆண்டு முதல் சிகரெட் வாங்கும் குறைந்தபட்ச வயது ஒவ்வொரு ஆண்டும் ஒரு வயதாக உயர்த்தப்படும். இதனால் புதிய தலைமுறை முழுவதும் புகைபிடிப்பிலிருந்து விலகச் செய்வதே அரசின் நோக்கமாகும்.
இந்த நடவடிக்கை மூலம் “smoke-free generation” உருவாக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. புகைபிடிப்பால் ஏற்படும் நோய்கள், மரணங்கள் மற்றும் மருத்துவச் செலவுகளை குறைப்பதே இந்த சட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



