பிரபல ஹிந்தி பாடகரின் குற்றச்சாட்டால் ஏ ஆர் ரகுமான் வாங்கிய ஆஸ்கார் விருதுக்கு ஆபத்து!

top-news

இசைப்புயல் ரஹ்மானின் புகழ் இன்று வரை உலகம் முழுவதும் பரவி கிடக்கின்றது. ஆனால் இவர் மீது திடீரென பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இன்று ஹிந்தியில் ஒரு பிரபல தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருப்பவர்தான் இந்த ராம்கோபால் வர்மா. ஹிந்தியில் ரங்கீலா , சிவா போன்ற படங்களை எடுத்தவர். தமிழிலும் படத்தை இயக்கியிருக்கிறார்.

இவர்தான் ரஹ்மான் மீது அந்த குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். ஆனால் அந்த இசை உண்மையிலேயே ரஹ்மானுடையது இல்லை என்றும் அது பிரபல இசையமைப்பாளர் சுக்விந்தர் சிங்கின் இசை என்றும் அவரை காப்பி அடித்துதான் ரஹ்மான் ஜெய்ஹோ பாடலுக்கு இசையமைத்தார் என்றும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

சுக்விந்தர் சிங் வேறொரு படத்திற்காக போடப்பட்ட இசையை அந்தப் படம் டிராப் ஆனதால் அதை ரஹ்மான் ஜெய்ஹோ பாடலுக்கு பயன்படுத்திக் கொண்டார் என்றும் ராம்கோபால் வர்மா கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உயிரே படத்தில் தையா தையா பாடலும் சுக்விந்தர் சிங்கின் இசைதான் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இதை பற்றி ரஹ்மான் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *