போலீஸ் அதிகாரியின் மகள் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானது குறித்து ஊகங்கள் வேண்டாம்! - தேசிய போலீஸ் படைத் தலைவர் நினைவுறுத்து

top-news

லஹாத் டத்து OCPD-யின் 14 வயது மகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  இறந்தவரின் மூத்த சகோதரி வீடு திரும்பியபோது, ​​ தனது சகோதரியை ரத்த வெள்ளத்தில் கண்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருட்டின் ஹுசேன் தெரிவித்தார்

இது எப்படி நடந்தது மற்றும் பிற விவரங்களை ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.


இதுகுறித்து  விசாரணை நடைபெற்று வருவதால், இந்த விவகாரத்தில் ஊகங்களை வெளியிடுவதை நிறுத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.


இன்று  காலை 9 மணிக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்கள் அழைக்கப்பட வேண்டிய சாட்சிகளை அடையாளம் கண்டு வருவதாகவும் ரஸாருதீன் கூறினார்.


இதற்கிடையில், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வால்தர் பி99 அரை தானியங்கி துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக சபா துணை போலீஸ் கமிஷனர் டத்தோ ஷாஹுரினைன் ஜெய்ஸ் தெரிவித்தார்!

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Haari M

Great Article