குடும்பத்தினர் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர்!

top-news

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC தன் மீது எந்தவொரு சொத்துக் குவிப்பு வழக்கும் இல்லை என வெளிப்படையாக அறிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். 

பிரதமர் அன்வாரின் தூண்டுதலில் தன் மீது வருமானத்திற்கு மீறிய சொத்து குவிப்பு, தன் பிள்ளைகள் மீது வரி ஏய்ப்பு போன்ற குற்றங்களைச் சுமத்தியுள்ளதாகவும், அதை நிரூபிக்காமல் காலம் கடத்தி தாமதமாக விசாரணையை மேற்கொள்வதால் தன் குடும்பம் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தனது சொத்துகளை முழுமையாக கணக்குக் காட்ட தாம் தயார் என்றும், தாம் முழு ஒத்துழைப்பு வழங்குவதால் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC மீட்டுக் கொள்ள வோண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இல்லையென்றால், தன்னையும் தன் குடும்பத்தையும் கெம்.ஏ.சி.சி. விசாரிப்பது போல அன்வார் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பையும்  வெளியிட உத்தரவிட வேண்டும், அன்வாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மகாதீர் தெரிவித்துள்ளார்.


Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *