பிரதமரை கேள்வி கேட்க அக்மாலுக்கு உரிமை உண்டு! - முன்னாள் சட்டத்துறை அமைச்சர்

top-news

முன்னாள் பிரதமர் நஜிப்பின் ‘வீட்டுக் காவல்’ விவகாரத்தில், பிரதமரைக் கேள்வி கேட்க அக்மலுக்கு உரிமை உள்ளது என்று சட்டத்துறை முன்னாள் அமைச்சர் ஸைட் இப்ராஹிம் கருத்து தெரிவித்துள்ளார்.

நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பாக பிரதமர்  அளித்த பதிலை   பிகேஆர் இளைஞரணித் தலைவர் ஆடம் அட்லி தற்காத்திருப்பது சரியல்ல என்று அவர் தெரிவித்தார்.

அன்வாருக்கு இந்த விவகாரம் தெரியுமா என்று அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே கேட்பது சரிதான்.

நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பாக கூறப்படும் ஆணைப் பிரச்சினை பல வழிகளில் முக்கியமானது.  இந்த விவகாரம் பிரதமருக்கு தெரியுமா என்று கேட்க நம்மில் பலரைப் போலவே அக்மலுக்கும் உரிமை உள்ளது.

ஆனால்,  இந்த விவகாரத்தில் அன்வாரைப் பாதுகாக்கும் ஆடம்,   பிரதமரின் கருத்து குறித்து  விளக்கமளிக்க வேண்டும், ”என்று தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்!

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *