ராயா பெருநாளுக்குப் பாஸ் கட்சியையும் அழைக்கிறேன்! – Nga Kor Ming

- Sangeetha K Loganathan
- 28 Dec, 2024
டிசம்பர் 28,
கிறிஸ்மஸ் பண்டிகையை இஸ்லாமிய அரசு அதிகாரிகள் கொண்டாடக் கூட்டாது என பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் Muhammad Hanif Jamaluddin தெரிவித்திருப்பது மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல் என உள்ளாட்சி வீடமைப்பு அமைச்சர் Nga Kor Ming கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமது துறை அரசு அதிகாரிகள் கிறிஸ்மஸ் கொண்டாடியதற்குப் பாஸ் கட்சியினர் இவ்வாறு கருத்திடுவது அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு என Nga Kor Ming விமர்சித்துள்ளார்.
பாஸ் கட்சியினர் என்றாலே மதம் சார்ந்து எதிர்வினையாற்றுபவர்கள் எனும்படியாக மாறிவிட்டது என Nga Kor Ming தெரிவித்தார். தாம் அமைச்சரானதிலிருந்து அனைத்து பண்டிகைகளையும் தமது அமைச்சு அங்கீகரித்துக் கொண்டாடி வருவதாகவும் அடுத்த ராயா பெருநாளைக் கொண்டாட அனைத்து மத இனச் சமூகத்துடனும் தாம் கொண்டாடும் போது பாஸ் கட்சியினரையும் அழைப்பதாக Nga Kor Ming தெரிவித்தார்.
Nga Kor Ming menegaskan prinsip menghormati kepelbagaian budaya, mengecam kenyataan Pemuda PAS yang melarang pegawai Muslim menghadiri sambutan Krismas. Beliau menjemput PAS ke sambutan Aidilfitri anjuran KPKT kelak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *