ஆசியாவின் புலியாக நாம் தொடர ஒற்றுமை அவசியம்! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஏப் 19: மலேசிய மக்கள் ஒன்றுபட்டு, தங்களின் வேறுபாடுகளைக் களைந்து தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொண்டால், 'ஆசியப் புலி' என்ற தனது நிலையை மீண்டும் பெறுவதற்கான ஆற்றல் மலேசியாவிற்கு உள்ளது என்று துணைப் ப்ரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்,

நாட்டின் வலிமை என்பது பொருளாதாரக் கொள்கைகளை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக, வாழ்க்கைச் செலவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மக்களின் ஒற்றுமையையும் சார்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்தச் சவால்களை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்கிறோம். எண்ணெய் விலை உயர்வால் எழும் பிரச்சனைகளைச் சமாளிக்க நாம் பிரார்த்தனை செய்வது மட்டுமல்லாமல், கடுமையாக உழைக்கவும் வேண்டும். இந்த விலை உயர்வு பொருட்களின் விலையை உயர்த்தி, இறுதியில் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கிறது.

இந்தச் சிரமங்களை எதிர்கொள்வதில் நாம் ஒன்றுபடும்போது, ​​மலேசியா மீண்டும் 'ஆசியாவின் பொருளாதாரப் புலியாக' மாறும் என்று தாம்
 உறுதியாக நம்புவதாக அவர் கூறினார்.

நமது மத, அரசியல் மற்றும் பிற வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு... இந்தப் பிரச்சினைகள் கூடிய விரைவில் தீர்க்கப்பட நாம் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *