தெரியாத சொர்க்கங்கள் - நீங்க இங்கே போனா ராஜா : உலகின் சுற்ற வேண்டிய நாடுகள்!

top-news
FREE WEBSITE AD

புதிதாக ஒரு நாட்டுக்குச் சுற்றுலா செல்வதற்கு முன்னாடி நிறைய விஷயங்களை யோசிக்க வேண்டி உள்ளது. உங்களுக்கு குளிரான இடம் பிடிக்குமா அல்லது வெயிலான இடம் பிடிக்குமா?கிராமப்புறங்களுக்கு போக வேண்டுமா அல்லது கடற்கரைக்கு செல்ல வேண்டுமா? உங்க பட்ஜெட் என்ன? இப்படி எல்லா விஷயத்தையும் செக் பண்ண வேண்டியுள்ளது.

சில சுற்றுலாப் பயணிகள் மற்றவர்கள் செல்லக் கூடிய புகழ்பெற்ற இடங்களையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், உலகத்திலேயே யாரும் அதிகமாக போகாத நாடுகளை நாம ஏன் செல்லக் கூடாது? என்று என்றைக்காவது நினைத்து இருக்கிறீர்களா? அப்படி உலகிலேயே சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லாத இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

திமோர் - லெஸ்தே

இது ஆசியாவிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடாகும். 2023 -ஆம் ஆண்டில் இங்கு 81,000 பார்வையாளர்கள் மட்டுமே வந்துள்ளனர். இங்குள்ள அழகான நிலப்பரப்புகள் சாகசப் பிரியர்களையும், ஆழ்கடல் நீச்சல் வீரர்களையும் வெகுவாக ஈர்க்கின்றன.

துவாலு

ஓசியானியா (Oceania) பகுதியில் அமைந்துள்ள இந்நாட்டிற்கு, 2023-ஆம் ஆண்டில் வெறும் 3,136 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். இங்கு ராணுவப் படைகள் கிடையாது, குற்றச் செயல்கள் மிகக் குறைவு, மேலும் அரசியல் கட்சிகள் ஏதும் இல்லாத ஒரு நாடாக இது திகழ்கிறது.

அங்கியுலா

கரீபியன் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவு, 2024 -ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுமார் 98,052 பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. பல பிரபலங்கள் தங்கள் விடுமுறை நாட்களை இந்தத் தீவில் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.

சியரா லியோன்

இந்த ஆப்பிரிக்க நாட்டிற்கு 2021-ஆம் ஆண்டில் சுமார் 44,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இங்கு மிகவும் அற்புதமான கடற்கரைகள் உள்ளன.

கொமொரோஸ்

இந்தத் தீவுக் கூட்டம் ஆழ்கடல் நீச்சல் வீரர்களால் அதிகம் விரும்பப்படும் இடமாகும். மடகாஸ்கர் மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்நாட்டிற்கு, 2021-ஆம் ஆண்டில் தோராயமாக 29,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

பிரெஞ்சு கயானா

தென் அமெரிக்காவிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடு இதுவாகும். 2017-ஆம் ஆண்டில் இங்கு சுமார் 1,11,000 பார்வையாளர்கள் வந்துள்ளனர். இந்நாடு பிரெஞ்சு கலாச்சாரத்தையும், அதே சமயம் சீன மற்றும் வியட்நாமிய சமையல் முறைகளின் தாக்கத்தைப் பெற்ற ஒரு தனித்துவமான உணவு முறையையும் வழங்குகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *