கிள்ளானில் பயங்கரம்... அதிகாலை வீட்டிற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள்!

top-news

கிள்ளான், அக் 5: கிள்ளான், பண்டாமாரான், ஜாலான் ஜகோங், என்ற இடத்தில் உள்ள  மூன்று மாடி பங்களாவில் 12 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் நேற்று அத்துமீறி நுழைந்து  ​​கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அதிகாலை 5 மணியளவில் இரண்டு கார்களில் வந்ததாக கிள்ளான்  காவல்துறைத் தலைவர் சா ஹூங் ஃபோங் கூறினார்.

அவர்கள் சுவரில் ஏறி, பிரதான கதவின் இரும்புத் தகட்டை வலுக்கட்டாயமாகத் திறந்து உள்ளே நுழைந்ததாக அவர் விளக்கினார்.

பின்னர் வீட்டில் இருந்த மூவரையும் கட்டிப் போட்டுவிட்டு,

அனைத்து அறைகளையும் சூறையாடி பணம், மதிப்புமிக்க தெய்வச் சிலைகள் மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்றதாக அவர் கூறினார்.

சுமார் RM600,000 மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான, 37 வயதுடைய நபர், இடது தோள்பட்டையில் வெட்டுக் காயத்திற்கு ஆளான நிலையில், கிள்ளானில் உள்ள பாண்டாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உள்ளூர்வாசிகள் என்று நம்பப்படும் சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை போலீசார் தீவிரப்படுத்தி வருவதாக ஃபோங் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்