இன்னும் ஒரு வெள்ளிக்கிழமைதான்! மலாக்கா சட்டமன்ற கலைப்பு குறித்து ரவூஃப் யூசோ
- Shan Siva
- 17 Sep, 2026
மஸ்ஜித் தானா, செப் 17: மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்ற வதந்திகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப் ரவூஃப் யூசோ (Datuk Seri Ab Rauf Yusoh) இன்னும் ஒரு வெள்ளிக்கிழமைதான் பாக்கி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
இங்கு நடைபெற்ற
மாநில அளவிலான முதியோர், மாற்றுத்திறனாளிகள்
மற்றும் குழந்தைகள் தின விழாவைத் தொடங்கிவைத்த பிறகு ஊடகங்களைச் சந்தித்த அவர் இவ்வாறு நகைச்சுவையான
தொனியில் கூறினார்.
சட்டமன்றம்
கலைக்கப்படுவதற்கு இன்னும் இரண்டு வெள்ளிக்கிழமைகள் உள்ளன என்று செப்டம்பர் 7 அன்று அவர் கூறியிருந்ததை நினைவுகூரும்
வகையிலேயே இந்தக் கருத்து அமைந்திருந்தது.
கடந்த ஒரு வாரமாக
மாநிலத்தில் சட்டமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என்ற ஊகங்கள் பரவலாக நிலவி
வருகின்றன.
இந்நிலையில் நாளை சட்டமன்றம்
கலைக்கப்பட வாய்ப்பில்லை என்றும், அடுத்த வாரம்,
அதாவது செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் அது நடக்கக்கூடும் என்றும் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



