பச்சிளம் குழந்தையைக் கொன்ற திருமணமாகாத தாய் இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 3: கடந்த மாதம் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 10-வது மாடியிலிருந்து தனது பச்சிளம் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை கீழே வீசி அதன் மரணத்திற்குக் காரணமான, ஒரு பெண் இன்று ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நீதிபதி ஜமீர் சுஹைமி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ​​22 வயதான நூரான் பத்ரிஸ்யா ஜமாலுதீன் என்ற அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குற்றப்பத்திரிகையின்படி, திருமணமாகாத அந்தப் பெண், மரணத்தை விளைவிக்கக்கூடிய உடல் காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு, அந்தக் குழந்தையின் மரணத்திற்குக் காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றம், மே 20 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை, ஜொகூர் பாருவின் தமான் சுதேரா உத்தாமாவில் உள்ள  PPR அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *