சூரி நாயகனாக நடிக்கவுள்ள 7 வது படத்தின் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

சினிமாவுக்குள் காமெடியனாக வந்து, இப்போது பரபரப்பான ஹீரோவாக வளர்ந்திருப்பவர் தான் சூரி.இவர் வெற்றிமாறன் இயக்கத்தில், 'விடுதலை' படத்திற்குப் பிறகு 'கருடன்', 'கொட்டுக்காளி', 'விடுதலை 2, 'மாமன்' போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகனவும், கதையின் நாயகனாகவும் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது 'மண்டாடி' என்ற படத்தில் நடித்துக் வருகிறார்.

இந்நிலையில், சூரி நாயகனாக நடிக்கவுள்ள 07-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை 'இன்று நேற்று நாளை', 'அயலான்' படங்களை இயக்கிய ஆர். ரவிகுமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை 'குட் பேட் அக்லி', 'ட்யூட்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது தமிழ்ப் படமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் அறிவிப்பில் உள்ள போஸ்டரை பார்க்கும் போதே, இது ஒரு வன்முறையான படம் என்பதை காட்டுகிறது. அதிலும், 'BLOOD FOLLOWED THE FLOOD' என்ற டேக்லைன் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகா மொத்தம் படம் ரத்தம் தெறிக்க தெறிக்க வர போகிறது என்பதில் மாற்றம் இல்லை. மதிமாறன் இயக்கத்தில் 'மண்டாடி' படத்தில் நடிப்பை முடித்தபின் சூரி இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *