பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர திடல்தட விளையாட்டுப் போட்டி!

- Muthu Kumar
- 18 Jun, 2025
(வீ.இராஜேந்திரன்)
பகாவ், ஜூன் 18-
கடந்த 13.6.2025 வெள்ளிக்கிழமை மாலை மணி 2க்கு தேசிய வகை பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர திடல்தட விளையாட்டுப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டியை நீலாய் சட்டமன்றம் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதனின் பிரதிநிதி முகுந்தன் சுப்ரமணியம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். அவர் தொடர்ந்து தமது உரையில் ஜ.அருள்குமார் இவ்விளையாட்டுப் போட்டிக்கு வெள்ளி 6 ஆயிரம் வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார். தொடர்ந்து பகாவ் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியை நந்தா பெரியசாமி. பெ.ஆ.சங்கத் தலைவர் சுகுமாரன் சீனிவாசகம் ஆகியோர் வரவேற்புரை மற்றும் தலைமையுரையாற்றினர். இவ்விளையாட்டுப் போட்டிக்கு மேலும் சிறப்புச் சேர்க்க பள்ளி மேலாளர் வாரியக்குழுத் தலைவர் சு.விஜயன், ஜெம்போல் மாவட்ட காவல்துறை அதிகாரி ஹர்யாந்தி பிந்தி ஷாப்ஹி, ஜெம்போல் மாவட்ட உதவி கல்வியதிகாரி அஹ்மாட் சாடினி,ஆசிரியர்கள், பெற்றோர்கள், நன்கொடையாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்விளையாட்டுப் போட்டி மாணவர் அணிவகுப்பு. மாணவர்களின் நடனங்களோடு தொடங்கியது.மாணவர்கள் தங்கள் விளையாட்டு இல்லங்களை பிரதிநிதித்து பல்வகைப் விளையாட்டுப் போட்டிகளில் மிகச் சிறப்பாக பங்கேற்றனர். மேலும் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள்,பாலர் பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கும் கண்கவர் போட்டிகள் நடத்தப்பட்டன.
இவ்விளையாட்டுப் போட்டியின் இறுதியில் ஒட்டுமொத்த வெற்றியாளராக பச்சை இல்லம் தேர்வு பெற்றது. இரண்டாம் நிலையில் சிவப்பு இல்லமும், மூன்றாவது நிலையில் நீல இல்லமும் வெற்றி பெற்றது. பச்சை இல்லத்தைச் சேர்ந்த பிரித்தம் தேன்முகிலன் சிறந்த விளையாட்டு வீரராகவும், சிவப்பு இல்லத்தைச் சேர்ந்த கஷ்விகா சந்திர மோகன் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதியாக இவ்விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடந்தேற ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பள்ளியின் தலைமையாசிரியை நந்தா பெரியசாமி நன்றி கூறினார்.
Pada 13 Jun 2025, Sekolah Tamil Ladang Bahau mengadakan sukan tahunan. Acara dirasmikan oleh wakil Ahli Dewan Undangan Negeri. Murid, ibu bapa, dan bekas pelajar turut serta. Rumah Hijau muncul juara keseluruhan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *