முஸ்லிம் அல்லாதோர் கவலை வேண்டாம்! எல்லாம் சரிசெய்யப்படும்! – ஹாடி அவாங்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 9: பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைமை பொறுப்பை பாஸ் (PAS) ஏற்பது குறித்த கவலைகளை பாஸ் தலைவர் துன் அப்துல் ஹாடி அவாங் இன்று நிராகரித்தார்.

புதிய கூட்டணி தலைவர் நியமிக்கப்பட்டு, நிர்வாக தொடர்பான விவகாரங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டவுடன், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் உள்ள அனைத்து கவலைகளும் நீங்கிவிடும் என அவர் தெரிவித்தார்.

அரசை தனித்து அமைக்க, பாஸ் கட்சிக்கும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கும், முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத மக்களின் ஆதரவும் அவசியம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

கூட்டணிக்குள், குறிப்பாக முஸ்லிமல்லாத கட்சிகளிடையே உள்ள கவலைகள், நிர்வாக செயல்பாடுகள் சீராக நடைபெற்றவுடன் தீர்ந்து விடும் அவர் குறிப்பிட்டுள்ளதாக பெரித்தா ஹரியான் மேற்கோள் காட்டியுள்ளது.

இதற்கு முன், தாசெக் குளுகோர்  நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை பாஸ் தலைமை ஏற்கும் பட்சத்தில், கெராக்கான் மற்றும் எம்.ஐ.பி.பி. கட்சித் தலைவர்கள் கவலை அடைவதாக கூறியிருந்தார்.

முஸ்லிமல்லாதோரை அடிப்படையைக் கொண்ட இந்த இரு கட்சிகளும், பாஸ் தலைமையில் இருந்தால், முஸ்லிமல்லாத வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் சிரமம் ஏற்படும் என அச்சம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *