பாரதிராஜா வீட்டில் மற்றொரு மரணம்!

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாரதிராஜா. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் இன்றும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கின்றார்.

இவருடைய மகன்தான் மனோஜ். இவரும் வருஷம் எல்லாம் வசந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இளம் வயதிலேயே காலமானார். இவருடைய இறப்பு இயக்குனர் பாரதிராஜாவை மிகவும் பாதித்தது. தனது மகன் இறப்புக்குப் பிறகு பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் சிகிச்சையில் உள்ளார்.

இப்படியான நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் மூத்த சகோதரியான தங்கத்தாய் (95) என்பவர் வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருடைய இறுதி சடங்கு இன்று நடைபெறும் நிலையில் பாரதிராஜா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் அவரால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஒரு சோகம் அடங்குவதற்குள் பாரதிராஜா வீட்டில் மற்றொரு சோகம் ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *