PN-க்கு ROS நோட்டீஸ்! இது அரசியல் அழுத்தமாக இருக்கலாம்! - தக்கியுதீன் ஹசான் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 24: பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் மீது சங்கங்களின் பதிவிலாகா எடுத்துள்ள நடவடிக்கைக்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என்று அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசான் (Takiyuddin Hassan) தெரிவித்துள்ளார்.

இக்கூட்டணிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தரப்புகளிடமிருந்து வந்த அரசியல் அழுத்தம் மற்றும் "தீய நோக்கத்துடன்" (mala fide) கூடிய நிகழ்ச்சி நிரலின் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறை PN நிராகரிக்கவில்லை என்று தகியுத்தீன் கூறினார்.

காரணம் காட்டுவதற்கான 30 நாள் அவகாசத்தை வழங்கிய பிறகு, PN-இன் பதிவை ரத்து செய்ய RoS உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கும் அறிவிப்பு ஒன்றை, 1966-ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் பிரிவு 13(2)-இன் கீழ் செவ்வாய்க்கிழமையன்று பெற்றதாக தகியுதீன் கூறினார்.

ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பெர்சாத்து (Bersatu) கட்சி அளித்த புகாருடன் இந்த ரத்து நடவடிக்கை தொடர்புடையது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை தனது செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு, அதே சட்டத்தின் பிரிவு 13(2A)-இன் கீழ் ஒரு உத்தரவையும் நேற்று PN பெற்றதாக அவர் கூறினார்.

RoS-இன் முடிவை PN கவனத்தில் கொள்கிறது; ஆனால் அந்த முடிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணங்களை ஏற்கவில்லை  என்று அவர் கூறினார்.

தனது உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் ஆதரவைப் பெற்றுள்ள தனது உருவாக்க நோக்கங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பாதுகாப்பதற்காக, சட்டரீதியான வழிமுறைகள் மூலம் PN உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.

இவ்விவகாரம் முறையாகக் கையாளப்பட்டு வருவதால், PN உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அமைதி காக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இது குறித்த தகவல்களை அவ்வப்போது PN வெளியிடும் என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *