ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாத ஆத்திரம் – 5 வங்கி இயந்திரங்களைப் பாராங் கத்தியால் சேதப்படுத்திய ஆடவர்!
- Shan Siva
- 02 Nov, 2026
கோலாலம்பூர், நவ 2: சரிக்கேய் பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாத ஆத்திரத்தில், வங்கி இயந்திரங்களை பாராங்கால் சேதப்படுத்திய ஆடவர், தடுக்க முயன்ற இளைஞர் ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 38 வயதுடைய அந்த ஆடவர், ஐந்து ஏடிஎம் இயந்திரங்களைச் சேதப்படுத்தியதாக சரிக்கேய் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அஸ்வாண்டி அனிஸ் தெரிவித்தார்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாததால் ஆத்திரமடைந்த அவர், அப்போது மது போதையில் இருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, டொயோட்டா ஹைலக்ஸ் வாகனத்தை எதிர்த் திசையில் ஓட்டிச் சென்ற அவர், ஜாலான் மஸ்ஜித் லாமா பகுதியில் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் அஸ்வாண்டி கூறினார்.
சம்பவத்தின்போது, அந்த ஆடவரைத் தடுக்க முயன்ற 21 வயது இளைஞரின் இடது கையில் பாராங்கால் வெட்டப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அந்தச் சந்தேக நபர் சரிக்கேய் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடமிருந்து டொயோட்டா ஹைலக்ஸ் வாகனமும் பாராங்கு பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அவரிடம் நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாகக் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

