நாட்டில் மருத்துவமனைகளில் கட்டம் கட்டமாக இணையச் சேவை விரிவுபடுத்தப்படும்-தியோ!

top-news
FREE WEBSITE AD

நெகிரி செம்பிலான் ரெம்பாவ் , மலாக்கா தானா மேரா,அலோர் காஜா, பினாங்கு ,சைபர் ஜெயா , கோலா திரெங்கானுவில் துவாங்கு நூர் ஜாஹிரா  மற்றும் கோலாலம்பூர்  மருத்துவமனை போன்றவற்றில் இணையச் சேவை விரிவுபடுத்தப்படும் என தியோ தெரிவித்தார். 

மலேசியத் தகவல் தொடர்பு பல்லூட ஆணையம், பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனைகள், சுகாதார சிறு மருத்துவ கூடங்கள் மற்றும் மாவட்டச் சுகாதார மையங்களில் தகவல் தொடர்பு வசதிகளை விரிவுபடுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என தியோ மேலும் தெரிவித்தார்.

மலேசியா அனைத்திலும் உள்ள மற்ற மருத்துவமனைகளில் இணைப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்வது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆதரிக்க சிறந்த இணைய அணுகல் தேவைப்படும் கிராமப்புற பள்ளிகள் மற்றும் பழங்குடி மக்கள் குடியிருப்புகளை அடையாளம் காண தகவல் தொடர்பு அமைச்சகம் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும் என்று தியோ கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *