அந்தோணி லோக்கை குறிவைத்து தாக்குகின்றனர்! DAP சாடல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 5: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மீது குற்றச்சாட்டு சுமத்திய MCA இளைஞர் பிரிவு துணைத் தலைவரை DAP கடுமையாக விமர்சித்துள்ளது.

DAP உதவித் தலைவர் ஷாரெட்சான் ஜோஹான், MCA இளைஞர் பிரிவு துணைத் தலைவர் மைக் சோங் வெளியிட்ட கருத்து “தரமற்றதும் மேலோட்டமானதும்” என்று சாடினார்.

ஒரு விமானி போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டதற்கு அந்தோணி லோம் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? உண்மையில் எழ வேண்டிய கேள்வி, அந்த விமானி பாதுகாப்பு சோதனைகளை எவ்வாறு கடந்து சென்றார் என்பதுதான்.

இது மிகக் கடுமையான பாதுகாப்பு குறைபாடு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாதுகாப்பு அல்லது எல்லைக் கட்டுப்பாடு போக்குவரத்து அமைச்சரின் பொறுப்பு அல்ல. இருந்தும், அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தில் அந்தோணி லோக்கை குறிவைத்து தாக்க முயற்சிக்கின்றனர் என்று தனது பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், இந்தோனேசியாவின் சோகர்னோ-ஹத்தா சர்வதேச விமான நிலையம் விமான நிலையத்தில், சுமார் 25 கிலோ எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் மெத்தாம்பெத்தமைன் கடத்தியதாக குற்றச்சாட்டில் ஒரு மலேசிய விமானி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை, அந்த விமானி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) வழக்கமான பாதுகாப்பு சோதனைகளை வெற்றிகரமாக முடித்த பின்னரே ஜகார்த்தாவுக்குப் புறப்பட்டதாக உறுதிப்படுத்தியது.

முன்னதாக, மைக் சோங், விமானப் பணியாளர்களுக்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் போதுமானதா என்பதை போக்குவரத்து அமைச்சகம் விளக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை அமைச்சர் லோக் தவிர்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *