மீண்டும் நடிகையாக களமிறங்கும் அனுஷ்கா ஷர்மா!

top-news
FREE WEBSITE AD

இந்தி சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியானது ரப் நே பனா தி ஜோடி என்ற படம். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா எழுதி இயக்கி இருந்தார்.இதில் நடிகர் ஷாருக் கான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா நாயகியாக நடித்து இருந்தார்.

இந்தப் படம் தான் நடிகை அனுஷ்கா ஷர்மா நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்த பிறகு அவர் இந்தி சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஷாருக் கான் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான துஜ்மே ரப் தகதாக் என்ற பாடல் தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்தி சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா ஷர்மா நாயகியாக நடித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு வரை படங்களில் நடித்து வந்த நடிகை அனுஷ்கா ஷர்மா அதனைத் தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. அதற்கு பதிலாக அவர் படங்களை தயாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நடிகை அனுஷ்கா ஷர்மா படங்களில் நடித்து 8 ஆண்டுகள் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அனுஷ்கா ஷர்மா இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வரும் AA22xA6 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்தால் அதுதான் அவரது தெலுங்கு சினிமா அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *