முதல் காலாண்டில் 85 கோடி ரிங்கிட் முதலீடு-டத்தோஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஆக. 26-

2025 முதல் காலாண்டில், உற்பத்தி மற்றும் சேவை போன்ற வியூகத் துறைகளை உள்ளடக்கி 85 கோடியே 56 லட்சத்து 30-ஆயிரம் ரிங்கிட் முதலீட்டை மலாக்கா பதிவு செய்துள்ளது.

எஃப்டிஐ எனப்படும் வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் DDI எனப்படும் உள்நாட்டு நேரடி முதலீட்டின் மூலம் கடந்தாண்டு 818 கோடி ரிங்கிட் பெறப்பட்டுள்ளதாக. அம்மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 500 கோடி ரிங்கிட் இலக்கைவிட அதிகமான முதலீடு பெறப்பட்டிருக்கும் நிலையில், மலாக்கா மாநிலம் நாட்டின் முன்னணி முதலீட்டு இடமாக மாறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

"அதேவேளையில், மாநில அரசாங்கம் எம்கார்ப் உயர் தொழில்நுட்ப பூங்கா, ஜெர்மனி தொழில்நுட்ப பூங்கா, GTP மற்றும் ELKAY 2.0 போன்ற வியூக மேம்பாடுகள் மூலம் முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது உயர் தொழில்நுட்ப தொழில்துறைக்கு ஓர் ஊக்குவிப்பாக இருக்கும். மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 கோடி ரிங்கிட் முதலீட்டு இலக்கை ஆதரிக்கும்," என்று அவர் கூறினார்.ஸ்ரீ நெகிரியில் நடைபெற்ற மலாக்கா மாநில விருது விழாவில் உரையாற்றிய அப்துல் ரவுஃப் அவ்வாறு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *