பத்துமலை திருத்தலத்தில் அன்வார்! பிரமாண்ட மாலையுடன் சிறப்பு வரவேற்பு!

top-news
FREE WEBSITE AD

கொம்பாக், பிப் 8: இந்துக்களின் திருவிழாவான தைப்பூசத் திருநாள், வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை கொண்டாடப்படவிருக்கும் நிலையில்,  உலகப் பிரசித்திப் பெற்ற மலேசிய பத்துமலை முருகன் திருத்தலத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று வருகை தந்தார். 
அவருக்குப் பிரமாண்ட மாலையுடன் சிறப்பு வரவேற்பு நல்கப்பட்டது.

திருத்தலத்திற்கு வருகையளித்த பிரதமர், அங்கு நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டார். அதோடு கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் ஆலய மேம்பாட்டுப் பணிகளின் சில திட்டங்களுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார். உடன் வந்திருந்த சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

பல் நோக்கு மண்டபம் தொடர்பான நிதியுதவிக்கு தாங்கள் உதவுவோம் என்று குறிப்பிட்ட அன்வார்,  உடனடியாக அதைப் பரிசீலிப்பதோடு, அந்த மண்டபம் இந்திய சமூகம் பயன்படுத்தக்கூடிய பல்நோக்கு மண்டபமாக மாற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

முஸ்லீம் அல்லாத பண்டிகைகள் மற்றும் இறுதிச் சடங்குகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவது தொடர்பாக தெளிவான விதிகளை அமைக்கும் சர்ச்சைக்குரிய வழிகாட்டுதல்கள் தேவையற்றவை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய வழிகாட்டுதல்கள் கவலையை மட்டுமே ஏற்படுத்தும் என்று அன்வார் கூறினார்.

முஸ்லிம்களுக்கு (நமது நம்பிக்கையின்) விதிகள் தெரியும் என்பதால், இதுபோன்ற வழிகாட்டுதல்கள் தேவையில்லை என்று தாம் நினைப்பதாக அவர் கூறினார். .

இதுதான் வழக்கம்.  நம் சமூகத்தில் விஷயங்களை சிக்கலாக்கி கவலையை ஏற்படுத்த வேண்டாம்.  இதைத்தான் அமைச்சரவை  முடிவு செய்தது என்று நேற்று பத்து மலையில்  செய்தியாளர்களிடம் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் வழிபாட்டு தலங்களுக்குச் செல்வது பொதுவானது என்று அன்வார் கூறினார்.

தேசம் அமைதியாக இருப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு இன மற்றும் மத குழுக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அன்வார் கூறினார்.

இஸ்லாம் மலேசியாவின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தாலும், நமது நாடு பல இனங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்டுள்ளது, என்று அவர் கூறினார்.

இஸ்லாமிய மத விவகாரங்களுக்கான தேசிய கவுன்சில் தலைவராக இருக்கும் பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் அமைச்சரவையின் முடிவை சமர்ப்பிக்கவிருப்பதாக அன்வார் கூறினார்.

முன்னதாக, பத்து மலை கோயில் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, பத்துமலை மண்டபத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவு மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் தனக்கு விளக்கமளித்ததாக அன்வார் கூறினார்!
 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *