சீனாவின் 21 முன்னணி நிறுவனங்களுடன் அன்வார் வட்டமேசை விவாதம்!
- Shan Siva
- 23 Sep, 2026
ஷாங்காய், செப் 23: அதிக மதிப்புமிக்க முதலீடுகளை மலேசியா ஈர்க்க முற்பட்டு வரும் நிலையில், செமிகண்டக்டர்கள் (semiconductors), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகள் குறித்து, சீனாவின் 21 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் வட்டமேஜை விவாதத்தில் ஈடுபட்டனர்.
மின்சார வாகனங்கள் (EVs), பேட்டரி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள், மேம்பட்ட ஒளியியல் (advanced optics), உயிரித் தொழில்நுட்பம், சுகாதாரம், சிறப்பு ரசாயனங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறை ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் இந்த விவாதத்தில் ஆலோசிக்கப்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள வாய்ப்புகள் மற்றும் இந்த முதலீடுகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்த தொழில் நிறுவனங்களின் திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை தாம் நேரடியாகக் கேட்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பப் பரிமாற்றம், உள்ளூர் திறமையாளர்களின் மேம்பாடு, மலேசிய நிறுவனங்களின் பங்கேற்பை வலுப்படுத்துதல் மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய தரமான முதலீடுகளை 'மடானி' (Madani) அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று இன்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு 'எக்ஸ்' (X) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



