சீனாவின் முக்கிய நிறுவனங்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை! பில்லியன் கணக்கில் முதலீடுகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 24: பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று சீனாவில், ஐந்து சீனத் தொழில் நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுடன் பல சந்திப்புகளை நடத்தினார். இதில், 2035-ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்வதாக உறுதியளித்த அஜிபாட் இன்னோவேஷன் நிறுவனமும் அடங்கும்.

பொதுப் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு ரோபோட்டிக்ஸில் நிபுணத்துவம் பெற்ற அஜிபாட்டின் இந்த முதலீடு, 5,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்று அன்வார் கூறினார்.

மலேசியாவின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், உள்ளூர் திறமையாளர்களுக்கு மேலும் தரமான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இசட்.டி.இ கார்ப்பரேஷன் 170 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள முன்முயற்சிகள் மற்றும் முதலீடுகளை கோடிட்டுக் காட்டியுள்ளதாக அன்வார் கூறினார்.

அலிபாபாவின் டிஜிட்டல் சூழலமைப்பின் மூலம், மலேசியப் பொருட்கள், குறிப்பாக நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் நாட்டின் ஹலால் தொழில்துறை ஆகியவற்றின் சந்தை அணுகலை சீன மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் பேசியதாக  அவர் ஒரு ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.

ஹியூமனாய்டு ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் மின் வணிகம் உள்ளிட்ட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை மையமாகக் கொண்டு ஐந்து நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக அவர் கூறினார்.

ஷாங்காய் மற்றும் ஹாங்சோவிற்கு மூன்று நாள் பல்ல் பயணம் மேற்கொண்டுள்ள அன்வார், மக்களுக்கும் நாட்டிற்கும் பொருளாதார செழிப்பை ஏற்படுத்துவதற்காக, உயர்தர முதலீடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஈர்ப்பதற்கும், உள்ளூர் திறமையாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், திறமையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகக் கூறினார்.

சீனா தொடர்ந்து 17 ஆண்டுகளாக மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்து வருகிறது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான இருதரப்பு வர்த்தகம் மொத்தம் 113.82 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *