முதல் நாள் வகுப்பில் அன்வாரால் கலகலப்பான பள்ளி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 12: கல்வி நாட்டின் முதன்மையான முன்னுரிமையாகத் தொடர்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பள்ளிப் பருவத்தின் முதல் நாளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வாழ்த்திய அன்வார், கல்வி முறையின் வெற்றி அரசாங்கம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது என்றார்.

கல்வி முறையின் வெற்றிக் கொள்கைகள்  வெறும் ஒதுக்கீடுகளை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக அரசாங்கம், பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஊழியர்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பைச் சார்ந்தது என்று அவர் கூறினார்.

அவர்களின் உற்சாகத்தையும் முகங்களையும் பார்ப்பது, ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோரின் உயர்ந்த நம்பிக்கைகளை மட்டுமல்ல, தங்கள் ஆசிரியர்களின் நம்பிக்கையையும், நாட்டின் எதிர்காலத்தின் மகத்தான அபிலாஷைகளையும் தாங்கி நிற்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

மதிப்புகள் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியின் மூலம், நாடு அறிவு, கொள்கை ரீதியான மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரு தலைமுறையை வளர்க்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

அன்வர்,  இன்று தனது மனைவியும் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன், மூன்று பள்ளிகளில் ஆரம்பகால பள்ளி உதவி (BAP)க்கான ஏற்பாடுகளைப்  பார்வையிட்டார்.

ஜனவரி 13 ஆம் தேதி, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் RM150 வரவு வைக்கப்படும் என்று பிரதமர் முன்னர் அறிவித்திருந்தார்.

எஸ்.கே சுங்கை பீசி, எஸ்.ஜே.கே.சி  குவாங் ஹான் மற்றும் எஸ்.ஜே.கே.டி சுங்கை பீசி பள்ளிகளுக்கு அன்வார் மற்றும் அவரது துணைவியார் இருவரும் சென்று பார்வையிட்டனர்.

இந்நிலையில், "ஆசிரியர் கண்டிப்பானவரா?" என்று அன்வார் ஒன்றாம் ஆண்டு மாணவியிடம் கேலியாய் கேட்க, அந்தக் குட்டி மாணவி அதற்குத் தலையசைக்க், ஆசிரியர் நல்ல ஆசிரியரா? என்று  அதே குழந்தையிடம் மீண்டும் கேட்க, அதற்கும் ஆமாம் என்று அந்தச் சிறுமி தலையசைத்ததில் கலகலப்பானது பள்ளி!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *