வணிக உரிமம் - விசாவைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை! அன்வார் உத்தரவு
- Shan Siva
- 05 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 5: உள்ளூர் அல்லது வெளிநாட்டினர் யாராக இருந்தாலும்,
சட்டவிரோதமாக உள்ளூர் வணிக நடவடிக்கைகளைக்
கைப்பற்றுவது அல்லது வணிக உரிமங்கள் மற்றும் விசாக்களைத் தவறாகப் பயன்படுத்துவது
கண்டறியப்பட்டால், அவர்கள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டினர்
உள்ளூர் வணிக நடவடிக்கைகளைக் கைப்பற்றி வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து,
இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக்
கூட்டத்தில் அன்வர் இந்த விஷயத்தை எழுப்பியதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி
ஃபட்சில் கூறினார்.
சட்ட விதிகளை
மீறியதாகவோ அல்லது வணிக நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட உரிமங்கள், விசாக்கள் அல்லது வசதிகளைத் தவறாகப்
பயன்படுத்தியதாகவோ கண்டறியப்பட்ட மலேசியக் குடிமக்கள் உட்பட எந்தவொரு தரப்பினர்
மீதும் கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்வர் கூறியதாக ஃபாமி மேற்கோள்
காட்டினார்.
செலாயாங் போன்ற
பகுதிகளில் வணிகம் செய்யும் வெளிநாட்டினரைக் குறிப்பிடுகிறாரா என்று கேட்டதற்கு,
தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருக்கும் ஃபஹ்மி,
பிரதமர் எந்தவொரு குறிப்பிட்ட குழுவையும்
தனித்துக் குறிப்பிடவில்லை என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



