அன்வாரின் முன்னால் அரசியல் செயலாளர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 28: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), பிரதமர் அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகினை கைது செய்துள்ளது.

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஆல்பர்ட் டீயிடமிருந்து லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, புத்ராஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு அமைப்பின் தலைமையகத்தில் விசாரணைக்காக இன்று ஷம்சுல் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டதாக MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.

சர்ச்சைகள் மூலம் அன்வாரை தாக்க மேற்கொள்ளப்படும்  முயற்சிகள் அரசாங்கத்தின் நற்பெயருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியதை மேற்கோள் காட்டி, செவ்வாயன்று ஷம்சுல் அன்வாரின் மூத்த செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *