BUDI DIESEL - அன்வார் அதிரடி அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 17: BUDI டீசல் திட்டத்தின் தகுதியை குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே மாற்ற முடியும் என்ற நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, BUDI டீசல் திட்டத்துக்கு தகுதி பெற்றவர்கள், BUDI95 திட்டத்தின் பயனாளியாக இருக்கும் எந்த ஒரு மலேசியருக்கும் தங்களது தகுதியை மாற்றிக் கொள்ளலாம் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட டீசல் வாகனங்களை வைத்திருக்கும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள், BUDI டீசல் தகுதியை அதிகபட்சம் மூன்று வாகனங்களுக்கு மாற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூச்சிங்கில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ மலேசியா நாள் கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் அன்வார், அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே இது நடைமுறைக்கு வருவதாக தெரிவித்தார்.

தகுதி மாற்றத்துக்கான விண்ணப்பங்களை BUDI MADANI இணையதளம் வழியாக மேற்கொள்ளலாம்.

இதனிடையே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் கல்வியாண்டில் பொதுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ஒருமுறை 500 ரிங்கிட் விமானப் பயண உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

தீபகற்ப மலேசியாவில் இருந்து சபா, சரவாக் அல்லது லாபுவான் சென்று உயர்கல்வியைத் தொடங்கும் 7,095 மாணவர்கள் இந்த உதவியால் பயனடைவார்கள் என அன்வார் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *