தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய அன்வார்
- Shan Siva
- 23 May, 2026
கோலாலம்பூர், மே 23: பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜயுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் விஜய் ஏற்றுக்கொண்ட முக்கியப் பொறுப்பிற்காக அவரை மீண்டும் வாழ்த்தியதாக அன்வார் கூறினார்.
வரும் செப்டம்பரில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவும் தாம் இந்தியா செல்லவிருப்பதை அவரிடம் தெரிவித்ததாக அன்வார் கூறினார். நேரம் அனுமதித்தால், தமிழகத்திற்கு ஒரு குறுகிய பயணம் மேற்கொள்ளக்கூடும் என்றும் தாம் தமிழக முதல்வரிடம் தெரிவித்ததாக அன்வார் தெரிவித்தார்.
தமிழக மக்களின் நலனுக்காகவும், அதன் எதிர்காலத்திற்காகவும் திறம்பட வழிநடத்த, விஜய்க்குத் தொடர்ச்சியான வலிமையும் ஞானமும் வழங்கப்பட வேண்டும் என்று அன்வார் பிரார்த்தனை செய்தார்.
மே 12 அன்று, தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்பட நட்சத்திரமான விஜய், முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்ததோடு, நெருங்கிய ஒத்துழைப்பை வளர்ப்பதில் தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



