அன்வார் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்! - அந்தோணி லோக்

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஜன 5: பொருளாதாரம், கல்வி மற்றும் நிறுவன சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதிய ஆண்டின் முதல் வேலை நாளான இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபுக் இதனைத் தெரிவித்தார். பிரதமர் துறை ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போதும், தனது புதிய ஆண்டு உரையை வழங்கும் போதும், இந்த அறிவிப்புகள் வெளியாகும் என அவர் கூறினார்.

இதற்கு முன்,  பிரதமர் தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் “பல அவசரமான விவகாரங்கள்” குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் லோக் சியூ ஃபுக் தெரிவித்தார்.

தொழில் முனைவோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவை வணிகச் சூழலை பாதிக்கக்கூடும். குறிப்பாக வரி மீளளிப்பு (tax refund) தொடர்பான பிரச்சினைகள் குறித்து தீர்வுகள் அறிவிக்கப்படும். இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க நேர்மறையான அறிவிப்புகள் வெளியாகும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

DAP பொதுச் செயலாளருமான லோக் சியூ ஃபுக், நேற்று நடைபெற்ற மலாக்கா DAP மாநாட்டைத் திறந்து வைத்த போது இதனை கூறினார். மேலும், புதிய ஆண்டை முன்னிட்டு, நாட்டின் மற்றும் அரசின் முக்கிய திசை நிர்ணயத்தை பிரதமரின் உரை எடுத்துரைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *