புங் மொக்தார் குடும்பதினருடன் அன்வார் நேரில் சென்று ஆறுதல்
- Shan Siva
- 07 Dec, 2025
கோலாலம்பூர், டிச 7: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) காலமான டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினின் குடும்பத்தினரை சந்தித்து தமது ஆறுதலைத் தெரிவித்தார்.
முன்னாள் சபா துணை முதல்வரின் குடும்பத்தினருக்கு மதானி அரசாங்கத்தின் சார்பாக அன்வார் இரங்கல் தெரிவித்தார்.அவரது மறைவு சபா மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெரும் இழப்பு என்று விவரித்தார்.
அவரது மறைவு சபாவிற்கும் நாட்டிற்கும் பெரும் இழப்பாகும், குறிப்பாக நிர்வாகம், அரசியல் மற்றும் மக்களைப் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய போராட்டத்திற்கு என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
இந்த கடினமான நேரத்தில் புங் மொக்தாரின் குடும்பத்தினருக்கு வலிமை கிடைக்க வேண்டும் என்று தாம் பிரார்த்தனை செய்வதாக அன்வார் கூறினார்.
சபா பாரிசான் நேஷனல் தலைவராகவும் இருந்த பங் மொக்தார், வெள்ளிக்கிழமை அதிகாலை 1.46 மணிக்கு கோத்தா கினாபாலுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



