நீலாய் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 21: நீலாய் , பண்டார் பாரு நீலாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த தங்க நகைக் கடை, நேற்று இரவு ஆயுதம் தாங்கிய இருவர் மூலம் கொள்ளையடிக்கப்பட்டது.

முழு முகக்கவசம் மற்றும் கருப்பு மழைக்கோட் அணிந்திருந்த  இருவரும் யமஹா Y15 வகை மோட்டார் சைக்கிளில், நேற்று இரவு 8 மணியளவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளையின் போது சந்தேக நபர்களிடம் துப்பாக்கி இருந்ததாகவும், ஆனால் துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை என்றும் நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்  கூறினார்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு இன்னும் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, 1971 ஆம் ஆண்டின் துப்பாக்கி சட்டம் – பிரிவு 4ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவ இடத்தில் உள்ள CCTV காட்சிகளில், சந்தேக நபர்களில் ஒருவர் டெலிவரி சேவை பையைக் கொண்டு வந்து, அதில் திருடப்பட்ட நகைகளை வைத்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது பதிவாகியுள்ளது.

இதனிடையே,பொது மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜோஹாரி யாஹ்யா உறுதியளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் உள்ளவர்கள், நீலாய் மாவட்ட போலீஸ் தலைமையகம் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *