15 கிலோ - 21 தட்டுகள் தங்கத்துடன் கொள்ளை! பிரிக்ஃபீல்ட்ஸில் பரபரப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 17: நேற்று காலை கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தன் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறை தேடி வருகிறது.

இந்தச் சம்பவம் காலை 11 மணியளவில் பதிவானதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் கூறினார்.

சந்தேக நபர்கள் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் கடைக்குள் நுழைந்து, சுமார் 15 கிலோ எடையுள்ளதும், சுமார் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையதுமான 21 தட்டு தங்கத்துடன் தப்பிச் சென்றதாக அவர் கூறினார்.

கடையின் பாதுகாப்பு ஊழியருக்குச் சொந்தமான ஒரு ஷாட் கன் மற்றும் ஒரு தோட்டாவும் திருடப்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *