ரோல்ஸ் ராய்ஸ் போன்ற கார்களுக்கும் இலவச டோல் கட்டணம் அவசியமா?!

top-news
FREE WEBSITE AD

சுவிட்சர்லாந்து, ஜன 23: பண்டிகைக் காலங்களில் இலவச டோல் கட்டணம் என்பது இனி குறிப்பிட்ட இலக்கின் அடிப்படையில் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

முந்தைய மானிய மாற்றங்களைப் போலவே, சுங்கக் கட்டண விலக்குகள் அனைவருக்கும் இல்லாமல், B40 மற்றும் M40 தரப்பினருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பிரதமரும் நிதியமைச்சருமான அவர் கூறினார்.

இந்த சுங்கக் கட்டண விலக்கு என்பது அனைத்துத் தரப்பினருக்கும் அவசியமா? என்ற பிரச்சினையை சிலர் எழுப்பியுள்ளனர்.

ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் மற்றும் மசெராட்டி போன்ற பணக்கார கார்கள் கூட இதனால் பயனடைகின்றன. எனவே குறைந்த வருமானம் கொண்ட தரப்பினருக்கு இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்..

உலகப் பொருளாதார மன்றம் (WEF) 2025 ஆண்டு கூட்டத்திற்கு தனது பணி வருகைக்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் இவ்வாறு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *