விநியோகப் பற்றாக்குறையினால் பினாங்கில் தேங்காய் விலை அதிகரிப்பு!
- Muthu Kumar
- 24 Dec, 2024
ஜோர்ஜ்டவுன், டிச. 24-
விநியோகப் பற்றாக்குறையினால், பினாங்கு மாநில சந்தைகளில் தேங்காய் விலைகள் திடீரென்று அதிகரித்திருப்பது குறித்து, பினங்கு பயனீட்டாளர் சங்கம் (பிபச) கவலை தெரிவித்துள்ளது.பல சந்தைகளில் தமது சங்கம் நடத்திய ஆய்வுகளில் இது தெரிய வந்திருப்பதாக, அச்சங்கத் தலைவர் மொஹிடின் அப்துல் காடீர் தெரிவித்தார்.
சாதாரண அளவிலான ஒரு தேங்காயின் விலை 2 வெள்ளியிலிருந்து 2.50 காசுக்கு அதிகரித்திருப்பதும் பெரிய அலவிலான தேங்காய் 3.30 காசுக்கு விற்கப்படுவதும் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக அவர் கூறினார்.“இதனால், 12 வெள்ளிக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தேங்காய்ப் பால் தற்போது 14 வெள்ளிக்கும் 15 வெள்ளிக்கும் இடையில் விற்கப்படுகிறது.
“துருவப்பட்ட தேங்காய் கிலோ ஒன்றுக்கு 8 வெள்ளிக்கு விற்கப்பட்டது இப்போது 11 வெள்ளிக்கு விற்கப்படுகிறது” என்று நேற்று திங்கள்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
இதர நடுகளிலிருந்து தேங்காய்கள் இறக்குமதி செய்யப்பட்டது நிறுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள விநியோகப் பற்றாக்குறையினால், அதன் விலைகள் அதிகரித்திருப்பதாக, வியாபாரிகள் கூறுவதாக மொஹிடின் தெரிவித்தார்.
கடந்த வாரம் முதல் தேங்காய்கள் கிடைப்பதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக, அதிகமான சில்லறை மற்றும் பொதுச் சந்தை வியாபாரிகள் புகார் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



