நோன்பு காலகட்டத்தில் தேங்காய் விநியோகம் போதுமானதாக இருக்கும் -ஃபாமா உத்தரவாதம்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, பிப். 17-

தேங்காய் பற்றாக்குறை பிரச்சினையை களையச் செய்வதற்கான பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பலனாக, நோன்பு மாதக் காலகட்டத்தில் நாட்டில் தேங்காய் போதுமான அளவில் இருக்கும் என்று, ஃபாமா எனப்படும் மத்திய விவசாய சந்தைப்படுத்துதல் வாரியம் உத்தரவாதம் அளித்துள்ளது.

சபா மற்றும் சரவாக் உட்பட இந்தோனேசியாவிலிருந்து மாதம் ஒன்றுக்கு சுமார் 640 மெட்ரிக் டன் தேங்காய்களை பெறுவதும் அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் அடங்கும் என்று, ஃபாமா துணைத் தலைமை இயக்குநர் ஷாரிஸான் சுடிமான் தெரிவித்தார். இந்தோனேசியாவிலிருந்து தேங்காய்கள் வருவது கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய
வேளையில், சபா மற்றும் சரவாக்கிலிருந்து இம்மாதம் 20ஆம் தேதி முதல் தேங்காய்கள் வரவிருப்பதாக அவர் கூறினார்.கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நாடு முழுமையிலும் தேங்காய் விநியோகம் பாதிக்கப்படத் தொடங்கியதாகக் கூறிய ஷாரிஸான், இதில் கிளந்தான் மாநிலம் மிக மோசமான விநியோகப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகிறது.

இங்குள்ள மக்கள் அதிகளவில் தேங்காய்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பூப்பூத்த பின்னரும் காய்கள் உருவாகாமல் போனதால், தேங்காய்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்து வருவதாகவும் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கிய தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை இதற்கு முக்கிய காரணங்களாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *