பக்காத்தானுடன் ஒத்துழைப்பு இல்லை! - அஸ்மின் அலி

top-news

கோலாலம்பூர், செப் 30: மலாக்கா மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கட்சிகள் உட்பட எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பெர்சாத்து ஒத்துழைக்காது என்று பெர்சாத்துவின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி இன்று தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் தேர்தலில் செய்தது போலவே, தேர்தலில் போட்டியிட பெர்சாத்து சின்னத்தையே கட்சி பயன்படுத்தும் என்றும் அஸ்மின் கூறினார்.

தற்போது தங்களின் கவனம், பல்வேறு இலக்குப் பகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதில் உள்ளது  என்று அவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், பெர்சாத்து தனித்துப் போட்டியிடுவதற்கான ஒரு வியூகத்தை வகுத்து வருவதாகவும், தனது தேர்தல் இயந்திரத்தைத் தயார் செய்து வருவதாகவும் அஸ்மின் கூறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்