இன்று விடுமுறை! நெகிரி செம்பிலான் அறிவிப்பு
- Shan Siva
- 03 Aug, 2026
கோலா பிலா, ஆக 3 நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பங்களித்த மாநில மக்களுக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, நெகிரி செம்பிலான் அரசாங்கம் இன்று சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளது.
நெகிரி செம்பிலானின் மாட்சிமைதங்கிய துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் கூறினார்.
நெகிரி செம்பிலானின் புதிய மந்திரி பெசாராக தனது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்த துவாங்கு முஹ்ரிஸுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் அவர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, முதலமைச்சராக தனது முதல் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் முடிவுகளின்படி, பாரிசான் நேஷனல் மாநில சட்டமன்றத்தில் 18 இடங்களையும், பெரிகாத்தான் நேஷனல் ஏழு இடங்களையும் வென்றன. இதன்மூலம், இவ்விரு கூட்டணிகளும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மாநில அரசை அமைத்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



