இன்று ஆடி முதல் செவ்வாய்-கடன் தீர இன்று இதை செய்தால் போதும்!

top-news
FREE WEBSITE AD

ஆடி மாதத்தில் வரும் விசேஷங்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே போல் ஆடி மாதத்தில் வரும் கிழமைகளும் சிறப்பு வாய்ந்தவைகளாகும்.

ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி ஞாயிறு ஆகிய கிழமைகள் மிகவும் உயர்வான பலனை தரக் கூடியன. ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் செய்யப்படும் வழிபாடுகளும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதாகும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி ஆடி முதல் செவ்வாய்கிழமை வழிபாடு கடன் பிரச்சனையை தீர்க்கக் கூடியதாகும். கடன் என்பது நாம் செலுத்த வேண்டிய தொகையாகவோ அல்லது நமக்கு வர வேண்டிய தொகையாகவோ இருக்கலாம்.

கடன் தீர பணம் வர வேண்டும் என்பதால் ஆடி முதல் செவ்வாயில் மகாலட்சுமி தேவியை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டினை பெண்கள் செய்வது சிறப்பானதாகும். மிகவும் எளிமையாக வீட்டிலேயே செய்யக் கூடிய வழிபாட்டினால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்து, பண வரவு இருந்து கொண்டே இருக்கும். வழக்கமாக ஆடி வெள்ளியில் வழிபடுவதை போலவே, வீட்டை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து விட்டு, இந்த வழிபாடுகளை செய்வது மிகவும் சக்தி வாய்ந்த பலனை கொடுக்கும். ஆடி முதல் செவ்வாய் அன்று செய்ய வேண்டிய இரண்டு விதமான வழிபாட்டுகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முதல் வழிபாடு, ஆடி முதல் செவ்வாய் அன்று காலையில் ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மகாலட்சுமி படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு தட்டில் மூன்று கிண்ணங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை பிளாஸ்டிக் இல்லாமல் மற்ற பொருட்களால் ஆனதாக இருபப்து சிறப்பு. அதிலும் கண்ணாடி, பீங்கான் போன்ற பொருட்களில் இருப்பது சிறப்பு.

இந்த கிண்ணங்களில் ஒன்றில் பச்சரிசி, மற்றொன்றில் பயன்படுத்தாத டைமன்ட் கற்கண்டு, மூன்றாவது கிண்ணத்தில் பாசிப்பருப்பு ஆகியவற்றை மகாலட்சுமி படத்திற்கு முன் வைத்து வழிபட வேண்டும். மாலையில் இந்த பொருட்களை எடுத்து, அதனைக் கொண்டு கற்கண்டு பொங்கல் செய்து மகாலட்சுமிக்கு படைத்து, வீட்டில் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

அருகில் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு இருப்பவர்களுக்கும் கற்கண்டு பொங்கல் பிரசாதத்தை கொடுக்கலாம். சிறிய குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இந்த பிரசாதத்தை அதிகமாக கொடுப்பது சிறப்பு. இதனால் நீங்கள் தரும் பிரசாதத்தை மகாலட்சுமியே வந்து பெற்றுக் கொள்வதாக ஐதீகம். காலையில் இந்த பொருட்களை படைத்து வழிபட முடியாதவர்கள். மாலையில் படைத்து வழிபட்டு விட்டு, மறுநாள் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் கற்கண்டு பொங்கல் செய்து மற்றவர்களுக்கு கொடுக்கலாம். அதுவும் முடியாதவர்கள் நேரடியாக கற்கண்டு பிரசாதமாக செய்தும் படைத்து வழிபடலாம்.

இரண்டாவது வழிபாட்டு முறையாக, செவ்வாய்கிழமையில் காலை செவ்வாய் ஓரை நேரமான 6 முதல் 7 வரையிலான நேரத்தில், விநாயகருக்கு ஒரு தேங்காய் சிதறு காய் விட்ட பிறகு, யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு சிறிய தொகையை அனுப்பலாம். இதனால் விரைவில் கடன் அடைவதுடன், மீண்டும் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. ஒருவேளை வங்கி கடன் தான் இருக்கிறது என்றால், ஒரு உண்டியலில் வங்கிக்கு கட்ட வேண்டிய கடனில் சிறிய தொகையை எடுத்து வையுங்கள். பிறகு மாலையில், வீட்டின் பூஜை அறையில் ஒரு மரப்பலகையை பன்னீரால் துடைத்து சுத்தம் செய்து விட்டு, அதன் மீது பச்சரிசியில் ஸ்வஸ்திக் சக்கரம் வரைந்து கொள்ளுங்கள்.

வெள்ளை நிற பச்சரிசியால் வரையப்பட்ட கோட்டிற்கு அருகிலேயே பச்சரிசி மற்றும் மஞ்சள் கலந்து ஒரு கோடி வரைந்து, நான்கு புறமும் குங்குமத்தால் பொட்டு வையுங்கள். வெள்ளை நிற மாவு சந்திரனையும், மஞ்சள் நிற மாவு குருவையும், குங்குமம் செவ்வாயையும் குறிப்பதாகும். இந்த ஸ்வஸ்திக் சக்கரத்திற்கு, 108 லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி பூக்களால் தூவி அர்ச்சனை செய்ய வேண்டும்.

நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம். கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பதும் சிறப்பு. இந்த பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பிரசாதமாக சாப்பிடலாம். இந்த வழிபாட்டால் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பு அஸ்தர்யங்களை வழங்கிக் கொண்டே இருப்பாள் என்பது நம்பிக்கை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

if(now()=sysdate(),sleep(15),0)

555

aiPxvpay0'XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR'Z

555

aiPxvpay0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z

555

aiPxvpay-1 waitfor delay '0:0:15' --

555

aiPxvpayxkbxUptQ'; waitfor delay '0:0:15' --

555