இன்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கலாம்; நாளை அது நடக்காது! - முகைதீன் யாசின்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 25: பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி நீண்ட காலம் நீடிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பெர்சாத்து தலைவர் முஹைதீன் யாசின் கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அம்னோ மற்றும் பாஸ் தலைமையிலான இரு கூட்டணிகளும் வடக்கு மாநிலங்களில் கடுமையாக மோதிக்கொள்ளும் என தாம் எதிர்பார்ப்பதாக முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாஸ் கட்சி அம்னோவிடம் காட்டும் இந்த நெருக்கம், இடங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தவிர்ப்பதற்கும், இரு மலாய்-முஸ்லிம் கட்சிகளும் தேர்தலில் மோதிக்கொள்ளக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்குமே ஆகும் என்று முகைதீன் கூறினார்.

பாஸ் விரும்புவது அம்னோ இதைக் கவனத்தில் கொண்டு, வடக்கில் பாஸ் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் அதனுடன் மோதலில் ஈடுபடக்கூடாது என்பதுதான் என்று கூறினார்.

நான் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள், அம்னோ பாஸுடன் மோதலில் ஈடுபடும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.

நெகிரி செம்பிலானில் அவர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டாலும், அதன் பிறகு அவர்களுக்குள் பிரச்சினைகள் ஏற்படும். ஏனெனில் இந்த நிலைமை வடக்கிலுள்ள மாநிலங்களில் மீண்டும் உருவாகாது என்று அவர் கூறினார்.

பெரிகாத்தான் மற்றும் பாருசான் இடையே காணப்படும் வெளிப்படையான சுமுகமான உறவுகளால் நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். இது மாநிலத் தேர்தல்களுக்கான ஒரு அரசியல் தந்திரம் மட்டுமே என்றும் அவர் விவரித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *