எதிர்க்கட்சி தலைவர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை! - சபாநாயகர்
- Shan Siva
- 24 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 24: லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்ஸா ஜைனுதீன் தனது
ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து எந்த
முடிவும் எடுக்கப்படாது என மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.
ஹம்ஸாவின்
ராஜினாமா குறித்து பெரிகாத்தான் நேஷனல் அனுப்பிய
கடிதம் கிடைத்ததை ஜொஹாரி ஒப்புக்கொண்டார். இருப்பினும், அவரிடமிருந்து கீழ்சபைக்கு முறையான ராஜினாமா கடிதம் கிடைக்கும் வரை, முன்னாள் பெர்சத்து துணைத் தலைவரான ஹம்ஸா அப்பதவியை வகிப்பார் என்றும் அவர்
கூறினார்.
கடிதம் கிடைத்த
பின்னரே, நாடாளுமன்றத்தில் அவருடைய
பதவியை தாம் பரிசீலிப்பேன் என்று ஜொஹாரி கூறினார்.
எதிர்க்கட்சித்
தலைவர் பதவியிலிருந்து ஹம்ஸா ராஜினாமா செய்ததை, ஏப்ரல் 12 அன்று பெரிககாத்தான்
நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் உறுதிப்படுத்தினார். பெர்சாத்து
கட்சியிலிருந்து ஹம்ஸா நீக்கப்பட்ட சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இது
நிகழ்ந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருப்பது குறித்த அறிவிப்புக் கடிதத்தைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு கூட்டணியின் பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசனுக்கு அறிவுறுத்தியதாக சம்சுரி கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



