குப்பைத் தொட்டியில் ஆண் சிசு உடல்! யோங் பெங் ஓய்வு மையத்தில் கண்டெடுக்கப்பட்டது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 6:  ஜொகூர் வடக்கு தெற்கு  அதிவேக நெடுஞ்சாலையின் யோங் பெங் ஓய்வு மையத்தில், பெண்கள் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் ஆண் குழந்தையின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது.

பிற்பகல் 3 மணியளவில் தொப்புள் கொடி இணைந்த நிலையிலேயே குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சட்டையால் மூடப்பட்டிருந்த அந்தக் குழந்தை உயிரிழந்திருந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் பத்து  பஹாட் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஷாருலனுவார் முஷாடட் அப்துல்லா சானி தெரிவித்தார்.

சடலம் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தகவல் உள்ளவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 316 (கருக்கலைப்பு) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *