சுங்கை செலிசெக் ஆற்றில் மூழ்கிய சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது
- Shan Siva
- 29 May, 2026
கோலாலம்பூர், மே 29: கம்போங் சுங்கை நிலம் அருகே, சுங்கை செலிசெக் ஆற்றில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன், இரண்டு நாட்களுக்குப் பிறகு உலு சிலாங்கூரில் உள்ள ஆற்றங்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளான்.
சிறுவன் ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில், சுமார் 6 மீட்டர் ஆழத்தில், நேற்று மாலை 4.36 மணிக்கு மூழ்காளர் குழுவினரால் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
மேல் நடவடிக்கைக்காக சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அது ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் ஆகிஃப் இம்ரான் அஸ்ருல் நிஜாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



