PKR கட்சிக்கு முதுகெலும்பு உள்ளதா? - புவாட் சர்காஸி கேள்வி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 17:  தெங்கு ஜஃப்ருல்  கட்சியில் இணைய விரும்பினால் அதனை நிராகரிக்கும் அதிகாரம் பிகேஆருக்கு உள்ளது என்று       
அம்னோ உச்சமன்ற  உறுப்பினர் புவாட் சர்காஷி தெரிவித்துள்ளார்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருக்கு தான் எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் பிகேஆர் முதுகெலும்பு கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என்று புவாட் கூறினார்.

தெங்கு ஜஃப்ருல் பிகேஆரில் சேர்வது உண்மையாக இருந்தால், அம்னோ உறுப்பினர்கள் இதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது என்பதால் வருத்தப்படலாம்.  ஆனால்,  பிகேஆர்தான் குற்றம் செய்ததாகக் கருதப்படும்.

பி.கே.ஆர் கட்சிக்கு அதன் கூட்டாளிகளை மதிக்கும் தார்மீக முதுகெலும்பு இருந்தால், குறிப்பாக ஒற்றுமை அரசாங்கத்திற்குள் ஒற்றுமை என்ற கொள்கையின் கீழ் அவரை நிராகரிக்கும் அதிகாரம் கட்சிக்கு உள்ளது என்று அவர் தனது  முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *